ADDED : மார் 07, 2025 07:29 PM
மத்திய அமைச்சர் அமித் ஷா அனைத்து மாநில மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதாக தவறான தகவலைத் தருகிறார். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் விருப்பப்பட்ட மொழியை படிக்கலாம் என கூறப்பட்டுள்ளதாக கூறுகிறார். ஆனால், ஹிந்தியும், சமஸ்கிருதமும் தான் படிக்க வேண்டும் என்பதை மன விருப்பமாகக் கொண்டு செயல்படுகின்றனர். மறைமுகமாக ஹிந்தியை திணிப்பதையே தலையாக பணியாகக் கொண்டுள்ளனர்.
சமஸ்கிருதம், பேசு மொழி இல்லாத ஒரு மொழி. அம்மொழிக்கு ஊக்கத் தொகையாக நூற்றுக்கணக்கான கோடிகளை வழங்குகின்றனர். ஆனால், உலகப் புகழ்பெற்ற செம்மொழியான தமிழுக்கு வெறும் 24 கோடி ரூபாய் தான்.
பிரதமர் மோடி உள்ளிட்ட ஒட்டுமொத்த மத்திய அரசும் நாடகம் ஆடுகிறது. அந்த நாடகம், தமிழகத்தில் எடுபடாது. வரும் 2026 சட்டசபைத் தேர்தலில் அதற்கான பதிலடி கொடுப்பர்.
கோவி.செழியன், கல்வி அமைச்சர்