ADDED : ஜூன் 03, 2024 06:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : ''மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்பார்,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் முடித்து அவர் கூறியதாவது:
மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் என்பது, அங்கு ஐந்து தலைமுறையாக வேலை பார்த்து வரும் தோட்ட தொழிலாளர்களின் விருப்பம். அரசு ஏற்று நடத்த வேண்டும் என, நான் அறிக்கை வாயிலாக குறிப்பிட்டுள்ளேன்.
அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பார்த்து, அடுத்த நடவடிக்கையை தெரிவிக்கிறேன். பா.ஜ., அதிக பெரும்பான்மை பெற்று மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்பார். இவ்வாறு அவர் கூறினார்.