மோடி தியானம் தேர்தல் கமிஷனுக்கு மார்க்சிஸ்ட் கடிதம்
மோடி தியானம் தேர்தல் கமிஷனுக்கு மார்க்சிஸ்ட் கடிதம்
ADDED : மே 30, 2024 02:27 AM
சென்னை:'கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் இருப்பது, தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முரணானது' என, இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம் அனுப்பியுள்ளது.
அக்கட்சியின் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதம்:
இறுதி கட்டத் தேர்தல், 57 தொகுதிகளில், ஜூன் 1ம் தேதி நடக்கவுள்ளது. இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, இன்றும், நாளையும் கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் செய்கிறார்.
இந்த காட்சியை, 'டிவி' மற்றும் சமூக ஊடகங்களில் ஒளிபரப்பு செய்தால், தேர்தல் முடிவுகளில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பிரதமர் மோடி, கன்னியாகுமரியில் தியானம் செய்யும் காட்சியை, 'டிவி', நாளிதழ்கள், சமூக ஊடகங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.