நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்றவர் மோடி: ராஜ்நாத் சிங் பாராட்டு
நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்றவர் மோடி: ராஜ்நாத் சிங் பாராட்டு
ADDED : ஏப் 16, 2024 03:40 PM

கிருஷ்ணகிரி: 'காங்கிரசால் சீர்குலைந்திருந்த பொருளாதாரத்தை சீர்படுத்தி, நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்றவர் பிரதமர் மோடி' என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் கூறினார்.
கிருஷ்ணகிரி தொகுதி பா.ஜ., வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: ஆலயங்களின் மாநிலமான தமிழகம் வரும் போது மனம் அமைதி கொள்கிறது. பார்லிமென்டில் செங்கோல் வைத்ததன் மூலம் தமிழ் கலாசாரம் பெருமைப்படுத்தப்பட்டுள்ளது.
செங்கோல்
தமிழகம் என்று பேசப்படும் போது நம் நினைவுக்கு வருவது செங்கோல் தான். இன்டர்நெட்டில் ஏற்பட்ட புரட்சியால் யூபிஐ சேவை தற்போது அதிகரித்துள்ளது. 2014ம் ஆண்டுக்கு பிறகு மருத்துவ வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. நாடு முழுவதும் புதிதாக 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன.
தமிழ் மொழி
பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் முதல் 25 நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.
ஐக்கிய நாடுகள் அவையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் எனக் கூறி தமிழின் பெருமையை மோடி உயர்த்தியுள்ளார். நாடு முழுவதும் தமிழ் மொழியை கொண்டு செல்ல பிரதமர் மோடி பாடுபடுகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

