ADDED : மார் 07, 2025 11:59 PM

திருப்பூர்: மதுரையில் ஜூன் 22ல், முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
சங்க இலக்கியங்கள் வணங்கும் குறிஞ்சி நில தெய்வம், தமிழ் கடவுள் முருகபெருமானின் லட்சக்கணக்கான பக்தர்களை ஒருங்கிணைக்கும் வகையில், ஜூன் 22ல், மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. இதில், ஐந்து லட்சம் பக்தர்களை பங்கேற்க வைக்க முயற்சி நடக்கிறது.
ஹிந்து தர்மத்தை, கோவில்களை, பண்பாட்டை காக்க, முருக பக்தர்கள் ஒருங்கிணைய வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம். இதற்காக ஜூன் 22ல், முருக பக்தர்கள் மாநாட்டை நடத்த ஹிந்து முன்னணி முடிவு செய்துள்ளது.
மாநாட்டில் பங்கேற்க வீடு வீடாக சென்று முருக பக்தர்களை அழைக்கவும், மாநாட்டின் நோக்கத்தை மக்களுக்கு விளக்கவும், பல்வேறு தொடர் நிகழ்ச்சிகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.