sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பழனியில் முருகன் மாநாடு கட்டுரைகள் வரவேற்பு

/

பழனியில் முருகன் மாநாடு கட்டுரைகள் வரவேற்பு

பழனியில் முருகன் மாநாடு கட்டுரைகள் வரவேற்பு

பழனியில் முருகன் மாநாடு கட்டுரைகள் வரவேற்பு


ADDED : ஜூன் 03, 2024 05:49 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு, ஆக., 24, 25ம் தேதிகளில் பழனியில் நடக்கிறது. இதில், ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்க, muthamizhmurugan maanadu2024.com என்ற தனி இணையதளம் துவங்கப்பட்டது. அதில், ஆய்வு கட்டுரைக்கான தலைப்புகள், வழிமுறைகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

கட்டுரைகள் தமிழ், ஆங்கிலத்தில் ஆறு பக்கங்களுக்கு மிகாமல், 'வேர்டு பைல்' வடிவத்தில் இருக்க வேண்டும். தமிழ் யூனிக்கோடு எழுத்துருவிலும், ஆங்கிலம் 'டைம்ஸ் நியூ ரோமன்' எழுத்துருவிலும் அமைதல் வேண்டும்.

கட்டுரையின் முன்பக்கத்தில் கட்டுரை தலைப்பு, கட்டுரையாளரின் பெயர், முகவரி, எந்த நிறுவனம், கடவுச் சீட்டு எண், இ- - மெயில் முகவரி, மொபைல் போன் எண், புகைப்படம் அவசியம் இடம் பெற வேண்டும்.

முழு கட்டுரையும் இணையதளம் வாயிலாக, வரும் 20ம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு, 94986 65116 அல்லது mmm2024palani@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

கட்டுரைகளில் திருத்தம் செய்வதற்கு தேர்வு குழுவினருக்கு உரிமை உண்டு. தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரையாளர்கள் மட்டுமே பதிவுக் கட்டணம் இல்லாமல் அனுமதிக்கப்படுவர். கட்டுரைகள் ஆய்வு மலரில் இடம்பெறும். கட்டுரை தேர்வு, ஜூலை 1ம் தேதி வெளியாகும் என, அறநிலைய துறை தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us