புயலுக்குப் பிறகு அமுத மழை பொழிவது போல நல்ல தீர்வு வரும்: நயினார் நாகேந்திரன்
புயலுக்குப் பிறகு அமுத மழை பொழிவது போல நல்ல தீர்வு வரும்: நயினார் நாகேந்திரன்
ADDED : செப் 17, 2025 05:32 PM

சென்னை: 'தேர்தலுக்கு இன்னும் 5,6 மாதங்கள் உள்ளன. கூட்டணியில் கடைசி நிமிடத்திலும் மாற்றம் வரலாம். புயலுக்குப் பிறகு அமுத மழை பொழிவது போல, பிரச்னைக்குப் பிறகு நல்ல தீர்வு கிடைக்கும்' என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இது குறித்து நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: பாஜ என்றைக்கும் அடுத்த கட்சி பிரச்னையில் தலையிடாது. பஞ்சாயத்தும் செய்யாது. நல்லதுக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள். கூட்டணி கட்சித் தலைவர் சந்தித்து பேசலாம். இபிஎஸ்யும், அமித்ஷாவும் சந்தித்து பேசுவதில் எந்த தவறும் இல்லை. செங்கோட்டையன் அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது அவர்கள் உட்கட்சி பிரச்னை. அதனை பொதுச்செயலாளர் இபிஎஸ் பார்த்துக் கொள்வார்.
கடைசி நேரத்தில்...!
தேர்தலுக்கு இன்னும் 5, 6 மாதங்கள் உள்ளன. கூட்டணியில் கடைசி நிமிடத்திலும் மாற்றம் வரலாம். புயலுக்குப் பிறகு அமுத மழை பொழிவது போல, பிரச்னைக்குப் பிறகு நல்ல தீர்வு கிடைக்கும். ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால், தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்பட்டால் தான், அதாவது இரட்டை இஞ்ஜின் சர்க்கார் இருந்தால்தான் நாட்டு மக்களுக்கு நன்மை கிடைக்கும்.
நிறைய திட்டங்கள்
அந்த வகையில் அன்று இருந்த முதல்வர் இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் பிரதமர் மோடியுடன் இணைந்து பேசி நிறைய திட்டங்களை கொண்டு வந்தார். ரூ.40 ஆயிரம், ரூ. 50 ஆயிரம் கோடிக்கு மேல் சாலை திட்டங்கள், வந்தே பாரத் ரயில்கள் என எல்லா திட்டங்களும் கொண்டு வந்தார்கள்.
இபிஎஸ் முதல்வராக வர அமித்ஷா சொன்னால், நிச்சயம் பிரசாரம் செய்வேன் என ஏற்கனவே தினகரன் கூறியிருந்தார். இப்போது ஏன் மாற்றி பேசுகிறார் என்று தெரியவில்லை. பசும்பொன் தேவர் அவர்களுக்கு பாரத ரத்னா வழங்குவது பற்றி மத்திய அரசு முடிவெடுக்கும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.