
ஷிண்டே நிலைமை மோசம்!
மஹாராஷ்டிரா அரசில், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு இப்போது எந்த முக்கியத்துவமும் தரப்படுவது இல்லை. முதல்வர் பட்னவிஸ், எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன், ஷிண்டேவிடம் ஆலோசிப்பது இல்லை. ஷிண்டேயின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. இதுகுறித்து அமித் ஷாவிடம் ஷிண்டே புகாரளித்துள்ளார்.
சஞ்சய் ராவத்
ராஜ்யசபா எம்.பி., - சிவசேனா
உத்தவ் அணி
சத்குரு நேரில் அழைத்தார்!
சத்குரு ஜக்கி வாசுதேவின் மஹா சிவராத்திரி நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். காங்கிரசின் சித்தாந்தம் சமூகத்தில் அனைவரையும் ஒற்றுமையுடன் வைத்திருப்பது. அந்த வகையில் என்னை நேரில் வந்து அழைத்ததால், அந்நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.
சிவகுமார்
கர்நாடக துணை முதல்வர்,
காங்கிரஸ்
மே.வங்க அரசு கைதேர்ந்தது!
மேற்கு வங்கத்தில் லட்சக்கணக்கான போலி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக வந்தவர்கள். இதுபோல் போலி வாக்காளர்களை சேர்த்து ஆட்சியை பிடிப்பதில், திரிணமுல் காங்கிரசார் கைதேர்ந்தவர்கள்.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
மூத்த தலைவர், காங்கிரஸ்