ADDED : மே 28, 2024 12:34 AM
மதுரை: மதுரை எஸ்.எஸ்.காலனியில் இயங்கிய நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மக்களிடம் பல கோடி முதலீடு பெற்று மோசடி செய்தது. இதன் இயக்குனர்கள் வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இதில், 17 நிறுவனங்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டு, 17.25 கோடி ரூபாய் மதிப்பிலான 752 வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டுள்ளன.
இதுவரை நிறுவனத்திற்கு சொந்தமான 19 சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மதிப்பு, 76 கோடியே 58 லட்சத்து 60,577 ரூபாய்.
இந்நிலையில், தேனி மாவட்டம், போடியை சேர்ந்த பாபு, 57, அவரது மகன் தனுஷ், 28, ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., மணீஷா தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்தனர்.
பாபு, நியோமேக்ஸ் தொடர்புடைய மூன்று நிறுவனங்களின் இயக்குனராக இருந்தவர். இவரதுமகன் ஏஜென்டாக செயல்பட்டு வந்துள்ளார்.