ADDED : ஜூன் 27, 2024 01:11 AM

சட்டசபையில் நடந்த விவாதம்:
பா.ஜ., - வானதி: சட்டசபையில் 'வாட்ஸாப்' வழியாக கேள்விகளை அனுப்ப அனுமதிக்க வேண்டும். எம்.எல்.ஏ.,க்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் தொடர்பாக அனுப்பும் தகவல்கள், பொதுமக்களுக்கு தெரிவதில்லை.
அதற்காக புதிய இணையதளத்தை உருவாக்க வேண்டும். 'ஆன்லைன்' வாயிலாக எம்.எல்.ஏ.,க்களின் செயல்பாடுகளை மக்கள் பார்க்கும் வகையில் தொழிற்நுட்ப வசதியை ஏற்படுத்த வேண்டும்.
சபாநாயகர் அப்பாவு: காகிதம் இல்லாத பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள், முதல்வர் ஸ்டாலின் முயற்சியால் கொண்டு வரப்பட்டு உள்ளன. இப்போது அதையும் தாண்டி, சட்டசபையில் 100 ஆண்டு காலத்தில் தலைவர்கள் என்னென்ன பேசினர் என்பதை அறியும் வசதி செய்யப்பட உள்ளது.
சட்டசபையில் நடந்த ஒரு விஷயம் குறித்து அதில் குறிப்பிட்டால், அதுதொடர்பாக, அனைத்து செய்திகளும் வரும். மிக விரைவில் இந்த வசதி வரவுள்ளது. நாட்டிலேயே இதுதான் முதல்முறை.
இவ்வாறு விவாதம் நடந்தது.