ADDED : செப் 08, 2024 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக அரசு சார்பில், 2020ல் இணைய பாதுகாப்பு கொள்கை வெளியிடப்பட்டது. தற்போதைய சூழ்நிலைக்கேற்ப, அக்கொள்கை புதுப்பிக்கப்பட்டு, 'இணைய பாதுகாப்பு 2.0' என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.
அரசின் தகவல் சொத்துக்களை பாதுகாத்தல், அரசுக்கு அவை கிடைப்பதை அதிகப்படுத்துதல், அவற்றை கண்காணிக்க ஒரு முறையை உருவாக்குதல், பாதுகாப்பு குறைபாடுகளை களைய உத்தியை உருவாக்குதல் போன்றவை, இக்கொள்கையின் முக்கிய நோக்கம்.