நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிலந்தி ஆற்றில், 0.30 மீட்டருக்கு தடுப்பணையை கட்டி, நீரை தேக்கும் பணியை கேரள அரசு துவங்கியுள்ளது. இங்கு தேங்கும் நீரை, குடிநீர் தேவைக்கு பயன்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.
காவிரியில், 3 டி.எம்.சி., நீரை கேரளாவிற்கு வழங்க வேண்டும் என, உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, சிலந்தி ஆற்றின் நீரை தடுக்கும் வகையில் கட்டுமானங்களை கேரள அரசால் செய்ய முடியுமா என்பது குறித்து, விரிவாக ஆராய்ப்பட்டு வருகிறது. விதியை மீறி கேரளா செயல்பட்டால், சட்ட பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும்.
- தமிழக அரசின் கேள்விக்கு, நீர்வளத்துறை அதிகாரிகள் அளித்துள்ள விளக்கம்.

