சுட்ட கதை அல்ல; பட்ட கதை நடிகர் செந்தில் 'அட்வைஸ்'
சுட்ட கதை அல்ல; பட்ட கதை நடிகர் செந்தில் 'அட்வைஸ்'
ADDED : பிப் 25, 2025 03:25 AM

சென்னை : கோவை ேஹாட்டல் அதிபர் பெயரில், 'டிவி' நடிகர் செந்திலிடம், சைபர் குற்றவாளிகள், 15,000 ரூபாய் பறித்துஉள்ளனர்.
'சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர்' போன்ற 'சீரியல்'களில் நடித்த செந்தில் வெளியிட்டுள்ள அறிக்கை:
எனக்கு தெரிந்த கோவையைச் சேர்ந்த ேஹாட்டல் அதிபரிடம் இருந்து, என்னிடம், 15,000 ரூபாய் கேட்டு குறுஞ்செய்தி வந்தது.
அப்போது, நான் கார் ஓட்டிக் கொண்டு இருந்தேன். அவரிடம் இருந்து எப்போதாவது தான் குறுஞ்செய்தி வரும்.
இதனால், 'சார் நம்பர் அனுப்புங்கள்' என, கூறினேன். எனக்கு வந்த மொபைல் போன் எண்ணுக்கு, ஆன்லைன் வாயிலாக, 15,000 ரூபாய் அனுப்பினேன். அப்போதுதான், அந்த எண் யோகேந்திரன் என்பவரின் பெயரில் இருப்பது தெரியவந்தது.
இது மோசடியாக இருக்கலாம் என, சந்தேகப்படும்போதே, என்னிடம் இருந்து, 15,000 ரூபாயை எடுத்து விட்டான். விபரம் தெரிந்த என் போன்றோரிடமே, ஒரு நொடியில் பணத்தை பறித்து விட்டனர். இது சுட்ட கதை அல்ல; பட்ட கதை.
யாருக்காவது பணம் அனுப்ப வேண்டும் என்றால் தீர விசாரித்து, உறுதி செய்த பின் அனுப்புங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.