ADDED : மே 11, 2024 09:14 PM
சென்னை:தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
l தாம்பரத்தில் இருந்து வரும் 16, 18, 23, 25, 30, ஜூன் 1, 6, 8, 13, 15, 20, 22, 27, 29ம் தேதிகளில் இரவு 9:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மதியம் 1:40க்கு கேரள மாநிலம் கொச்சுவேலிக்கு செல்லும்
l கொச்சுவேலியில் இருந்து வரும் 17, 19, 24, 26, 31, ஜூன் 2, 7, 9, 14, 16, 21, 23, 28, 30ம் தேதிகளில் மதியம் 3:35க்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 7:35 மணிக்கு தாம்பரம் வரும். இந்த ரயில் விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மதுரை, செங்கோட்டை வழியாக இயக்கப்படும்
l எழும்பூரில் இருந்து வரும் 17, 19, 24, 26, 31, ஜூன் 2, 7, 9, 14, 16, 21, 23, 28, 30ம் தேதிகளில் இரவு 11:50க்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8:30 மணிக்கு வேளாங்கண்ணி செல்லும்
l வேளாங்கண்ணியில் இருந்து வரும் 18, 20, 25, 27, ஜூன் 1, 3, 8, 10, 15, 17, 22, 24, 29, ஜூலை 1ம் தேதிகளில் மதியம் 2:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் இரவு 11:30 மணிக்கு எழும்பூர் செல்லும்.
இந்த ரயில் விழுப்புரம், கடலுார் போர்ட், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் வழியாக இயக்கப்படும். சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.