ADDED : ஆக 07, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், வரும் 9ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தோல்வியை தழுவியதற்கான காரணம் குறித்து, ஒவ்வொரு தொகுதிவாரியாக நிர்வாகிகளை அழைத்து, கடந்த மாதம் 10ம் தேதி முதல், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
கரூர் தவிர, 38 தொகுதிகளுக்குமான ஆலோசனைக் கூட்டம் முடிந்துள்ளது.
இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வதற்காக, வரும் 9ம் தேதி காலை, சென்னையில் மாவட்டச்செயலர்கள் கூட்டம் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.