
ஏப்ரல் 16, 1953
கோவையில், ஷியாமன்னா - ராஜம்மாள் தம்பதியின் மகனாக, 1953ல் இதே நாளில் பிறந்தவர் ரவிச்சந்திரன். இவர், கோவை பி.எஸ்.ஜி., கல்லுாரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். பாரதிராஜா இயக்கிய, நிழல்கள் படத்தில் நடிகராக அறிமுகமாகி, 'நிழல்கள்' ரவி ஆனார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் நடித்தார். தமிழில், வேதம் புதிது, நாயகன், புதுப்புது அர்த்தங்கள், சின்னதம்பி பெரியதம்பி, அண்ணாமலை, மறுபடியும், ஆசை, பிகில் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திரம், வில்லன் வேடங்களில் நடித்து புகழ் பெற்றார்.
பாலசந்தர் இயக்கிய, 'ரயில் சினேகம்' என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தார். தொடர்ந்து 'ஜன்னல், அப்பாவுக்காக, காசளவு நேசம், சூர்ய புத்திரி, அலைகள்' உள்ளிட்ட தொடர்களிலும் நடித்தார். அமிதாப்பச்சன் ஹிந்தியில் நடத்திய, 'கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சிக்கு, தமிழில் பின்னணி குரல் வழங்கி, அமிதாப்பின் பாராட்டை பெற்றார்.
வெள்ளித்திரையில் அறிமுகமாகி, 'வெப் சீரிஸ்' வரை தன் திறமையை வெளிப்படுத்தும், 'நிழல்கள்' ரவியின் 71வது பிறந்த தினம் இன்று!

