
மே 5, 2021
சென்னை, சைதாப்பேட்டையில், 1933ல் பிறந்தவர் நடராஜன் எனும் டி.கே.எஸ்.நடராஜன். இவர் சிறுவயதிலேயே டி.கே.எஸ். நாடகக் குழுவில் இணைந்து நடித்ததால், டி.கே.எஸ். நடராஜன் என அழைக்கப்பட்டார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்த இவர், ரத்த பாசம் திரைப்படத்தில் துணை நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து, நாடோடி, நீதிக்கு தலைவணங்கு, தேன் கிண்ணம், உதயகீதம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
சங்கர் கணேஷ் இசையில், வாங்க மாப்பிள்ளை வாங்க என்ற படத்தில், 'என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி' என்ற பாடலை பாடி, பாடகராக பிரபலமானார். தொடர்ந்து, 'கொட்டாம் பட்டி ரோட்டிலே' என்பது உள்ளிட்ட தெம்மாங்கு பாடல்களை பாடினார். தனியாக இசைக்குழு வைத்து, மேடை பாடகராகவும் வலம் வந்தார். தன் 88வது வயதில், 2021ல் இதே நாளில் மறைந்தார்.
தெம்மாங்கு பாடகர் மற்றும் நடிகர் டி.கே.எஸ். நடராஜன் மறைந்த தினம் இன்று!