sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


ADDED : மே 14, 2024 09:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2024 09:58 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மே 15, 1907

பஞ்சாம் மாநிலம், லுாதியானா மாவட்டம், லயால்பூரில், ராம்லால் தாபரின் மகனாக, 1907ல் இதே நாளில் பிறந்தவர் சுக்தேவ் தாபர்.

தன் 3 வயதில் தந்தையை இழந்து, சித்தப்பா அசிந்த்ராமிடம் வளர்ந்தார். லயால்பூர் தன்பத்மல் ஆரியா பள்ளி, சனாதன உயர்நிலை பள்ளிகளில் படித்தார். இவரின் சித்தப்பா ஆரிய சமாஜத்தின் மீதும், விடுதலைப் போரிலும் ஆர்வமுடையவர். அதே ஆர்வம் இவருக்கும் ஏற்பட்டது.

பள்ளியில், 'யூனியன் ஜாக்' கொடிக்கு வணக்கம் வைக்காததால் தாக்கப்பட்டார். லாகூர் தேசியக் கல்லுாரியில் சேர்ந்தார். அங்கு, பகத்சிங்குடன் பழகினார். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் கவரப்பட்டு, கதராடை அணிந்தார்.

போலீஸ் அதிகாரி சாண்டர்ஸ் கொலை வழக்கு, லாகூர் கலவர வழக்குகளில் கைதானார். லாகூர் சிறையில் 15 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். பகத்சிங்கின் போராட்டங்களை சிறையிலிருந்தே ஆதரித்தார். பிரிட்டிஷாரை எதிர்த்ததால், 1931ல், மார்ச் 23ல் துாக்கிலிடப்பட்டார்.

அன்னியரை எதிர்த்து, 24 வயதில் மறைந்த புரட்சியாளர் பிறந்த தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us