
மே 31, 2007
ராமநாதபுரத்தில், ஷேக் ஹூசைன் - காதர் தம்பதியின் மகனாக, 1928, அக்டோபர் 15ல் பிறந்தவர் ஷேக் உசைன் முகமது கமால் எனும் எஸ்.எம்.கமால்.
ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லுாரி கல்வியை முடித்த இவர், மண்டபம் முகாமில் வட்டாட்சியராக பணியாற்றினார். ராமநாதபுரத்தில் தமிழ்ச் சங்கத்தை நிறுவி, இலக்கிய கருத்தரங்குகளை நடத்தினார். மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராக பணியாற்றினார்.
'தமிழ் அருவி' எனும் இதழின் ஆசிரியராக பணியாற்றினார். ஆவண காப்பகங்களில் இருந்து தகவல்களை சேகரித்து கல்வெட்டு, செப்பேடு ஆதாரங்களுடன், 'ராமநாதபுரம் மாவட்ட வரலாற்று குறிப்புகள், சீர்மிகு சிவகங்கைச்சீமை' உள்ளிட்ட வரலாற்று நுால்களை எழுதினார். இவரது 18 நுால்களை அரசு நாட்டுடைமை ஆக்கியுள்ளது. 'தமிழ்ப்பணி செம்மல், சேவா ரத்னா, தமிழ் மாமணி, வள்ளல் சீதக்காதி' உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், 2007ல் தன், 79வது வயதில் இதே நாளில் மறைந்தார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆய்வாளர் மறைந்த தினம் இன்று!