
ஜூன் 9, 2011
மஹாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டம், பண்டர்பூரில், ஹுசைன் சுலைமாணி போரா முஸ்லிம் குடும்பத்தில், 1915, செப்டம்பர் 17ல் பிறந்தவர் மக்புல் பிதா ஹுசைன் எனும் எம்.எப்.ஹுசைன்.
இவர், சிறுவயதில் தாயை இழந்து, இந்துாரில் படித்தார். புராண கதைகளை படித்து ஓவியங்களை வரைந்தார். மும்பை ஜே.ஜே. கலைப் பள்ளியில் ஓவியம் கற்று, திரைப்பட விளம்பரங்கள், வரலாற்று புகழ் பெற்ற இடங்களை வரைந்தார். இவரின், 'சுன்ஹேரா சன்சார்' ஓவியம் தேசிய விருது பெற்றதால் புகழடைந்தார்.
இந்திய - மேற்கத்திய பாணிகளை இணைத்து, 150 ராமாயண ஓவியங்கள், மகாபாரத கதைகள், விநாயகர், காந்தி, தெரசா உள்ளிட்ட ஓவியங்களை ஜூரிச் ஓவிய கண்காட்சியில் வைத்து, ஒரு ஓவியத்தை 10 கோடி ரூபாய்க்கு விற்று உலகப்புகழ் பெற்றார்.
ராஜ்யசபா எம்.பி., பதவியுடன், 'பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன், பாரத ரத்னா' உள்ளிட்ட உயரிய விருதுகள் இவரை தேடி வந்தன. தன் 96வது வயதில், 2011ல் இதே நாளில் லண்டனில் மறைந்தார். இவரது நினைவு தினம் இன்று!

