sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

1


ADDED : பிப் 24, 2025 12:17 AM

Google News

ADDED : பிப் 24, 2025 12:17 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

-பிப்ரவரி 24, 1886

இலங்கை, யாழ்ப்பாணத்தில் உள்ள சுண்டிக்குளியில், தமிழறிஞர் ஆறுமுக நாவலரின் சீடரான ராமலிங்கத்தின் மகனாக, 1886ல், இதே நாளில் பிறந்தவர், ஆர்.முத்தையா. இவர், சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து, உறவினர்கள் ஆதரவுடன் கலாசாலையில் படித்தார். தன், 21வது வயதில், மலேஷியா நாட்டின் ரயில்வே பணியில் சேர்ந்தார்.

அப்போது, கணக்குப்பதிவு, பொருளாதாரம், அச்சடித்தல், சுருக்கெழுத்து உள்ளிட்டவற்றை கற்றார். ஆங்கில தட்டச்சு இயந்திரம் போல, தமிழில் உருவாக்க முயற்சித்தார். நான்கு வரிசையில் உள்ள, 46 விசைகளுக்குள், தமிழின், 247 எழுத்துகளை அடக்குவது சவாலாக இருந்தது.

அதன் பின், 'நகரா விசை' என்ற புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, விசைப்பலகை தயாரித்தார். ஆங்கில எழுத்துகளை விட பல மடங்கு அதிக எழுத்துகளை உடைய தமிழுக்கு, 'ஸ்டாண்டர்ட் தட்டச்சு' என்ற பெயரில், புதிய தட்டச்சுப் பொறியை உருவாக்கினார். தொடர்ந்து, 'பிஜோ, ஐடியல் போர்ட்டபிள் தட்டச்சு' என்ற பெயரில் இயந்திரங்களை உருவாக்கினார். இவர் மறைந்த தினம் பற்றிய குறிப்புகள் இல்லை.

'தமிழ் தட்டச்சு பொறியின் தந்தை' என, போற்றப்படுபவரின் பிறந்த தினம் இன்று!






      Dinamalar
      Follow us