sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தாமரை பிரதர்ஸ் பதிப்பக (Thamarai Brothers Publication) வெளியீட்டில் அண்ணாமலையின் உங்களில் ஒருவன்

/

தாமரை பிரதர்ஸ் பதிப்பக (Thamarai Brothers Publication) வெளியீட்டில் அண்ணாமலையின் உங்களில் ஒருவன்

தாமரை பிரதர்ஸ் பதிப்பக (Thamarai Brothers Publication) வெளியீட்டில் அண்ணாமலையின் உங்களில் ஒருவன்

தாமரை பிரதர்ஸ் பதிப்பக (Thamarai Brothers Publication) வெளியீட்டில் அண்ணாமலையின் உங்களில் ஒருவன்

5


UPDATED : ஆக 23, 2024 07:42 PM

ADDED : ஆக 23, 2024 07:00 PM

Google News

UPDATED : ஆக 23, 2024 07:42 PM ADDED : ஆக 23, 2024 07:00 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தாமரை பிரதர்ஸ் பதிப்பக (Thamarai Brothers Publication) வெளியீட்டில் அண்ணாமலையின் உங்களில் ஒருவன் புத்தக வெளியீடு சென்னையில் நடந்தது.

Image 1311649


வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ம் தேதி அன்று, புண்ணிய பூமியான ராமேஸ்வரம் மண்ணில் தொடங்கிய, தமிழக பாஜகவின் என் மண் என் மக்கள் நடைப்பயணத்தில், தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், பொதுமக்களோடு பயணித்த ஒவ்வொரு அனுபவத்தையும், தினந்தோறும் பதிவு செய்யும் வாய்ப்பினை தினமலர் நாளிதழ் வழங்கியிருந்தது. தற்போது, நாளிதழில் வெளியான நமது பயண அனுபவங்களைத் தொகுத்து, 'உங்களில் ஒருவன்' என்ற புத்தகமாக வெளியிட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

Image 1311650


இன்று காலை, தினமலர் நாளிதழ் வெளியீட்டாளர் ( கோவை) திரு.ஆதிமூலம், தினமலர் நாளிதழ் இணை ஆசிரியர் திரு.இரா.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில்,தினமலர் நாளிதழ் வெளியீட்டாளர் (மதுரை) மரியாதைக்குரிய திரு. Dr. L.ராமசுப்பு அவர்களிடம், 'உங்களில் ஒருவன்' புத்தகத்தைப் பெற்றுக் கொண்டதில் பெருமையடைகிறேன்.

Image 1311651


பெரும் பாரம்பரியமிக்க, தேசியச் சிந்தனை மிக்க தினமலர் நாளிதழ், குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைப்பதற்கான போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்ததோடு, பொதுமக்கள் நலனுக்காக எப்போதுமே குரல் கொடுத்து வரும் பெருமைக்குரியது. அரசுகள் தவறிழைக்கும் போது, ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைத்து, ஜனநாயகத்தின், வலிமையான நான்காவது தூண் என்ற பத்திரிகை தர்மத்தினையும் கடைப்பிடித்து வரும் சிறப்புக்குரியது.

Image 1311652


கடந்த 73 ஆண்டுகளாக, சீரிய முறையில் செயலாற்றி வரும் தினமலர் நாளிதழில், என் மண் என் மக்கள் பயண அனுபவங்களை, பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பினை வழங்கியதற்கும், அவற்றை, 'உங்களில் ஒருவன்' என்ற புத்தகமாக வெளியிட்டிருப்பதற்கும், நாளிதழ் நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.






      Dinamalar
      Follow us