ADDED : மே 11, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: இலங்கையில் இருந்து 7.45 கிலோ தங்கம் கடத்திய வழக்கில் ஒருவரை சுங்கத்துறை கைது செய்த நிலையில், முக்கிய குற்றவாளியை தேடி வருகிறது.
ஜன.,4ல் இலங்கையில் இருந்து கடல் வழியே ராமேஸ்வரத்திற்கு ரூ.4.90 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தி வரப்பட்டது. அதை தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மைக்கேல் ராயப்பன் என்பவர், தனது ஊழியரான அதே பகுதியைச் சேர்ந்த ஐசக் 47, மூலம் போலீசார் சந்தேகப்படாத வகையில் டூவீலரில் எடுத்து வரச்செய்தார்.
கண்காணிப்பில் திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டதை அறிந்து கடத்தல் தங்கத்தை போட்டுவிட்டு ஐசக் தப்பினார். அவரை நேற்றுமுன்தினம் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் மூளையாக செயல்பட்ட மைக்கேல் ராயப்பனை கைதுசெய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.