ADDED : ஜன 09, 2025 06:47 PM

வாழ்க்கை சிறக்க...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது சிந்துப்பட்டி. இங்கு ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தரும் வெங்கடேசப் பெருமாளை தரிசித்தால் வாழ்க்கை சிறக்கும். புளியம்பழத்தை தெலுங்கில் சித்தப்பண்டு எனச் சொல்வர். இப்பகுதியில் அடர்ந்த புளிய மரங்கள் நிறைந்து இருந்ததால் சித்தப்பண்டூர் என அழைத்தனர். இதுவே தற்போது சிந்துப்பட்டி என மருவியுள்ளது. கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக்கு பிறகு திருப்பதி, அதை சுற்றியுள்ள பகுதிகள் அந்நியர்களின் வசமானது. இதனால் அப்பகுதி மக்கள் இங்கு வந்தனர்.
அப்போது தாங்கள் வழிபட்ட பெருமாள் சிலையையும் கொண்டு வந்துவிட்டனர். அவர்தான் இத்தலத்தில் அருள்பாலிக்கும் வெங்கடேசர். இங்கு கொடிக்கம்பத்தின் மீது கருடனுக்கு பதிலாக கருப்பண்ணசாமி காட்சி தருகிறார். வேண்டுதல் நிறைவேற இந்தக் கொடி மரத்திற்கு அபிேஷகம் செய்கின்றனர். விபூதி பிரசாதமாக தரப்படுகிறது.
திருமங்கலத்தில் இருந்து 15 கி.மீ.,
நேரம்: காலை 7:00 - 12:00 மணி மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 96003 33058
அருகிலுள்ள தலம்: உசிலம்பட்டி சொக்கலிங்க சுவாமி 10 கி.மீ.,
நேரம்: காலை 7:00 - 11:00 மணி மாலை 5:00 - 7:00 மணி

