ADDED : ஜூலை 01, 2024 02:51 AM
சென்னை: கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்கள், வரும் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை திருத்தம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக கால்நடை மருத்துவ பல்கலையின் கீழ் உள்ள கல்லுாரிகளில், பி.வி.எஸ்சி., என்ற கால்நடை மருத்துவம், ஏ.ஹெச்., என்ற கால்நடை பராமரிப்பு, பி.டெக்., என்ற பால், கோழியின தொழில்நுட்ப படிப்புகள் உள்ளன.
இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, ஜூன் 3 முதல் 28ம் தேதி வரை, https://adm.tanuvas.ac.in என்ற இணையதளம் வாயிலாக நடந்தது.
இதில், 17,497 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆன்லைன் விண்ணப்ப பதிவில் ஏதாவது தவறு செய்திருந்தால், வரும் 3 முதல் 5ம் தேதி வரை திருத்தம் செய்யவும், விடுபட்ட சான்றிதழ்களை இணைக்கவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்பின், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, இம்மாதம் இறுதியில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளதாககால்நடை மருத்துவ பல்கலை தெரிவித்து உள்ளது.