ADDED : மே 07, 2024 04:57 AM
சென்னை : மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனமான, 'சிப்பெட்', பிளாஸ்டிக் பொறியியலில் மூன்றாண்டு டிப்ளமா படிப்புகளை நடத்துகிறது. இதில் சேர விரும்பும் மாணவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நடப்பு கல்வி ஆண்டுக்கான டிப்ளமா வகுப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது. பிளாஸ்டிக் மோல்டு தொழில்நுட்பம், பிளாஸ்டிக் தொழில்நுட்பம் ஆகியவற்றில், மூன்று ஆண்டு டிப்ளமா படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதில் சேர, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை.
சிப்பெட் டிப்ளமா முடித்தவர்கள், பிளாஸ்டிக் தொழில்நுட்ப பி.டெக்., வகுப்புகளில் நேரடியாக சேரலாம். டிப்ளமா சேர ஆன்லைனில் விண்ணப்பிக்க, https://cipet24.onlineregistrationform.org/CIPET இணையதள முகவரியை பார்வையிடவும்.
மேலும் விபரங்களுக்கு 96002 54350, 99418 44937, 93450 22712 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், www.cipet.gov.in இணையதளத்தை பார்வையிடலாம்.