ADDED : ஆக 07, 2024 12:53 AM
சென்னை:தஞ்சாவூர் மாவட்டத்தில், பாதாள சாக்கடை சீரமைப் புணியின்போது, மண் சரிந்து விழுந்து இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு, 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், புதுப்பட்டனம் கிராமத்தில், பாதாள சாக்கடை சீரமைப்புப்பணி நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் மாலை, பணியின் போது மண் சரிந்து விழுந்ததில், ஜெயநாராயணமூர்த்தி, 29, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தேவேந்திரன், 34 ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இருவரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி ஜெயநாராயணமூர்த்தி இறந்தார். இதை அறிந்த முதல்வர், அவரது குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய்; தேவேந்திரனுக்கு ஒரு லட்சம் ரூபாய், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.