தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சிலை கடத்தல் தகவல்கள் வழங்க டி.ஜி.பி., உத்தரவு

 சிலை கடத்தல் தகவல்கள் வழங்க டி.ஜி.பி., உத்தரவு

 சிலை கடத்தல் தகவல்கள் வழங்க டி.ஜி.பி., உத்தரவு


ADDED : செப் 29, 2026 02:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 02:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: கடந்த தி.மு.க., ஆட்சிக் காலத்தில், சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பாக மறுக்கப்பட்ட தகவல்களை வழங்க, பொது தகவல் அதிகாரிக்கு காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை பெரம்பூரை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் பி.கல்யாணசுந்தரம், 2023ல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பொது தகவல் அதிகாரிக்கு ஒரு மனு அனுப்பினார்.

அதில், சிலை கடத்தல் தொடர்பான ஒரு குறிப்பிட்ட வழக்கு ஆவணங்களை, அவர் கேட்டிருந்தார்.

சம்பந்தப்பட்ட பொது தகவல் அதிகாரி தகவல் தர மறுத்து விட்டார். இதையடுத்து, டி.ஜி.பி., அலுவலகத்திற்கு கல்யாண சுந்தரம் முறை யீடு மனு அனுப்பினார்.

அதன் மீது, கடந்த மூன்று ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், மேல்முறையீட்டு மனு மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

கடந்த 2023 மே மற்றும் ஜூலை மாதங்களில் நடந்த சிலை கடத்தல் வழக்குகள் குறித்து தகவல்கள் வழங்குமாறு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பொது தகவல் அதிகாரிக்கு, டி.ஜி.பி., அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us