விஜயகாந்திற்கு மே 9ல் பத்மபூஷண்: டில்லி செல்கிறார் பிரேமலதா
விஜயகாந்திற்கு மே 9ல் பத்மபூஷண்: டில்லி செல்கிறார் பிரேமலதா
ADDED : ஏப் 29, 2024 12:35 AM

சென்னை : ''விஜயகாந்திற்கு மே 9ம் தேதி டில்லியில் பத்மபூஷண் விருது வழங்கப்பட உள்ளது'' என தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா கூறினார்.
சென்னையில் உள்ள தே.மு.தி.க., அலுவலகத்தில் மோர் மற்றும் தண்ணீர் பந்தலை திறந்துவைத்த அவர் கூறியதாவது:
தமிழகத்திற்கு 'அலர்ட்' கொடுக்கும் அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் துவங்க உள்ளது. எனவே மக்களுக்கு தேவையான உதவிகளை அனைவரும் வழங்க முன்வர வேண்டும். விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது வழங்கப்படுவது குறித்து மூன்று நாட்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து அழைப்பு வந்தது.
![]() |
அங்கு என்ன நடந்தது என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும். தலைநகர் சென்னையில் ஓட்டு சதவீதம் குறைந்துள்ளது தலைகுனிவு. வெயில் அதிகமாக இருந்ததால் ஓட்டுப்போட செல்லவில்லை என்று காரணம் கூறுகின்றனர்.
கடற்கரை, பூங்கா, பப் சென்று அரசியல் பேசுபவர்களும், இலவச அறிவுரை கூறுபவர்களும் ஓட்டளிக்கவில்லை என்று தெரிகிறது.
கருத்து சொல்வதை விட்டு விட்டு ஜனநாயக கடமையாற்ற வேண்டும். பிரதமர் என்பவர் நாட்டிற்கு முதன்மையானவர். அவர் சொல்லும் கருத்துக்கள் உன்னிப்பாக கவனிக்க கூடிய விஷயம். பா.ஜ., என்றாலே முஸ்லிம் சமூகத்திற்கு எதிரானது என்ற கருத்து உள்ளது. எனவே பிரதமர் மோடி கவனமுடன் பேச வேண்டும். அவரது பேச்சில் உள்நோக்கம் இருந்தால் அது குறித்து அவரிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும். இவ்வாறு பிரேமலதா கூறினார்.


