பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் போராட்டம்: துப்பாக்கிச்சூடு
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் போராட்டம்: துப்பாக்கிச்சூடு
ADDED : மே 11, 2024 11:34 PM

புதுடில்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மக்கள் அரசு நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு பகுதிகளை பாகிஸ்தான் அரசு நிர்வாகம் நேரடியாக நிர்வகித்து வருகிறது. இங்கு அரசு நிர்வாகம் கடுமையான வரி விதிப்பு, பண வீக்கம், அறிவிக்கப்படாத மின் வெட்டு, மின் பற்றாகுறை ஆகிய காரணங்களாக மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நேற்று பாகிஸ்தான் அரசு நிர்வாகத்தை கண்டித்து மக்கள் பரவலாக போராட்டம் நடத்தினர். இவர்களை அடக்கி ஒடுக்க போலீசர் ஏ.கே. 47 ரக துப்பாக்கியை காட்டி வானத்தை நோக்கி சுட்டு மிரட்டினர். சில இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பபகுதி முழுதும் பதற்றம் காணப்படுகிறது.