ADDED : ஆக 10, 2024 02:50 AM
வக்பு வாரிய சொத்துக்களை பாதுகாக்கவும், திருச்செந்துறை கிராமம் உள்ளிட்ட பல கிராமங்களில் நிகழ்ந்த தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்கவும் தான் மத்திய அரசு சட்டம் திருத்தம் கொண்டு வந்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் தி.மு.க., - காங்கிரஸ் உள்ளிட்ட, 'இண்டி' கூட்டணி கட்சிகள் இரட்டை நிலைப்பாடு அம்பலத்திற்கு வந்துள்ளது.
முஸ்லிம் மத விவகாரத்தில் அரசு எப்படி தலையிடலாம் என்று கேட்பவர்கள், ஹிந்து கோவில்களை மட்டும், மத நம்பிக்கை இல்லாதவரை கொண்டு நிர்வகிக்கப்படுவதை நியாயப்படுத்துகின்றனர்.
தமிழகத்தை ஆளும் தி.மு.க., ஹிந்து மதத்தை மட்டும் வெறுக்கும் கட்சி. ஆனால், தி.மு.க.,வினர் பார்லிமென்டில் முஸ்லிம் மத விவகாரத்தில் அரசு எப்படி தலையிடலாம் என, கேட்கின்றனர். 'இண்டி' கூட்டணி கட்சிகளின் இரட்டை நிலைப்பாட்டை மீண்டும் ஒரு முறை மக்கள் புரிந்துகொள்ள வக்பு வாரிய சட்ட திருத்தம் வாய்ப்பை தந்துள்ளது.
- வானதி சீனிவாசன்
தலைவர், பா.ஜ., தேசிய மகளிரணி

