ADDED : மார் 01, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, மார்ச் 1-
தமிழகத்தில் முதுமலை, ஆனைமலை புலிகள் காப்பகங்களில், யானைகள் பாதுகாப்பு முகாம்கள் உள்ளன.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில், கோழிகமுத்தி யானைகள் முகாம், 1975 முதல் செயல்படுகிறது. இங்கு தற்போதைய நிலவரப்படி, 20க்கும் மேற்பட்ட யானைகள் பராமரிக்கப்படுகின்றன.
யானைகள் பராமரிப்பில், கூடுதல் கவனம் செலுத்தும் வகையில், 'மஹவுட்' எனப்படும், யானை பயிற்சியாளர்கள், காவடி எனப்படும் பராமரிப்பாளர்கள் பணியிடங்களை அதிகரிக்க வனத்துறை, அரசிடம் அனுமதி கோரியது.
அதை பரிசீலித்த அரசு, ஒன்பது பயிற்சியாளர், இரண்டு பராமரிப்பாளர் பணியிடங்களை புதிதாக உருவாக்க ஒப்புதல் அளித்துள்ளது.