பின்னணி பாடகி சுசீலா மருத்துவமனையில் அனுமதி: மிகவும் நலமுடன் உள்ளார்
பின்னணி பாடகி சுசீலா மருத்துவமனையில் அனுமதி: மிகவும் நலமுடன் உள்ளார்
UPDATED : ஆக 17, 2024 10:17 PM
ADDED : ஆக 17, 2024 08:46 PM

சென்னை: பிரபல பின்னணி பாடகி சுசீலா உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா, மிகவும் நலமாக இருக்கிறார் என டாக்டர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
88 வயதாகும் பிரபல பின்னணி பாடகியான சுசீலா பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். பூத்மபூஷன் விருது . 5 முறை தேசிய விருது, 3 முறை தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
சுசிலா தனியாக 17,695 பாடல்களும் தெலுங்கில் மட்டும் 12 ஆயிரம் பாடல்களும் எஸ்.பி.பி.யுடன் 4 ஆயிரம் பாடல்களும், கே.வி. மகாதேவன் இசையமைப்பில் 2 ஆயிரம் பாடல்களும் கே. சக்ரவர்த்தி இசையமைப்பில் 2,500 பாடல்களும் பாடியுள்ளார். இந்திய மொழிகளில் அதிகமான பாடல்கள் பாடியதற்காக கின்னஸ் சாதனை மற்றும் ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை படைத்துள்ளார்.
தமிழில் பக்தி பாடல்கள் உள்ளிட்ட 6 ஆயிரம் பாடல்களும் கன்னடத்தில் 5 ஆயிரம் பாடல்களும் பாடியுள்ளார். எம்.எஸ்.வி இசையில் டி.எம்.செளந்தராஜன் உடன் 1,500 பாடல்கள் பாடியுள்ளார். மலையாளத்தில் 1,500 பாடல்களும் பாடியுள்ளார்.
வயது முதிர்வு மற்றும் சிறுநீரக தொற்று ஆகிய உடல் நல குறைவு காரணங்களால் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னணி பாடகி பி.சுசீலா, மிகவும் நலமாக இருக்கிறார் என டாக்டர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.