UPDATED : மே 14, 2024 04:46 PM
ADDED : மே 14, 2024 05:28 AM

சென்னை : பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்படப்பட்டது. 241 அரசுபள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 8,11,172 பேர் தேர்வு எழுதினர். இதில் 7, 39, 539 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்தம் 91.71 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு 90.93 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்த நிலையில், இந்த ஆண்டு 91.17 சதவீத பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 241 அரசுப்பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதம்
100க்கு 100 பெற்றவர்கள்
பாடப்பிரிவு வாரியாக தேர்ச்சி விகிதம்
கோவை முதலிடம்
இணையதளம்
முதன்மை கல்வி அலுவலர்கள், தங்கள் மாவட்டத்திற்கான, அனைத்து பள்ளிகளின் தேர்வு முடிவுகள் மற்றும் பகுப்பாய்வு அறிக்கையை, இன்று காலை 10:00 மணிக்கு, தங்கள் அடையாள எண், பாஸ்வேர்டு பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.
