பிரதமர் மோடியின் உதவித்தொகை ரூ.471 கோடி விடுவிப்பு
பிரதமர் மோடியின் உதவித்தொகை ரூ.471 கோடி விடுவிப்பு
ADDED : பிப் 25, 2025 03:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டத்தின் கீழ், தமிழக விவசாயிகளுக்கு, 471 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு, சாகுபடி நேரத்தில் உதவும் வகையில், பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டம், 'பி.எம்.கிஸான்' என்ற பெயரில் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில், மூன்று தவணைகளாக, தலா 2,000 ரூபாய் வீதம், ஆண்டுதோறும் 6,000 ரூபாய், விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், 19வது தவணை நிதியை பிரதமர் மோடி நேற்று விடுவித்தார். நாடு முழுதும் உள்ள 9.80 கோடி விவசாயிகளுக்கு, 22,000 கோடி ரூபாய், நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 22.5 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்கில், 471 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.