ஊட்டியில் பா.ஜ., தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி: எஸ்.பி மன்னிப்பு கேட்ட பின் போராட்டம் வாபஸ்
ஊட்டியில் பா.ஜ., தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி: எஸ்.பி மன்னிப்பு கேட்ட பின் போராட்டம் வாபஸ்
UPDATED : மார் 25, 2024 04:10 PM
ADDED : மார் 25, 2024 02:53 PM

நீலகிரி: ஊட்டியில் பா.ஜ., வேட்பாளர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்தபோது, வெளியில் இருந்த தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில், சில தொண்டர்கள் காயமுற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி லோக்சபா தொகுதியில் பா.ஜ., சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று (மார்ச் 25) பா.ஜ., தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அந்த நேரத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத போலீசார் தொண்டர்களை நோக்கி தடியடி நடத்தினர். இதனால் பா.ஜ., தொண்டர்கள் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


