விஜயகாந்த், தமிழிசை வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
விஜயகாந்த், தமிழிசை வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
UPDATED : ஆக 21, 2024 10:35 AM
ADDED : ஆக 21, 2024 06:35 AM

சென்னை : அரசியல் தலைவர்கள் மூன்று பேரின் வீடுகளுக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது.
மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, அவரின் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
அதேபோல, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை, தெலுங்கானா கவர்னராக இருந்த போது, அவரின் வீட்டிற்கும், தற்போது, தமிழக காங்., தலைவராக உள்ள செல்வப்பெருந்தகை வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டு இருந்தது.
விஜயகாந்த் மறைந்து விட்டார். தமிழிசையும் கவர்னர் பதவியில் இல்லை. செல்வப்பெருந்தகையும் தன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என்று கூறிவிட்டார். இதனால், மூவரின் வீடுகளுக்கும் அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது.

