sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மின் நுகர்வு மீண்டும் உச்சம்; 41 நாளில் 1,400 மெகாவாட் உயர்வு

/

மின் நுகர்வு மீண்டும் உச்சம்; 41 நாளில் 1,400 மெகாவாட் உயர்வு

மின் நுகர்வு மீண்டும் உச்சம்; 41 நாளில் 1,400 மெகாவாட் உயர்வு

மின் நுகர்வு மீண்டும் உச்சம்; 41 நாளில் 1,400 மெகாவாட் உயர்வு

3


UPDATED : மே 04, 2024 04:43 AM

ADDED : மே 04, 2024 04:35 AM

Google News

UPDATED : மே 04, 2024 04:43 AM ADDED : மே 04, 2024 04:35 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : தமிழகத்தில் தற்போது வீசும் வெப்ப அலையால், 'ஏசி' உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் மின் நுகர்வு அதிகரித்து வருகிறது. ஏப்., 30ம் தேதி மாலை இதுவரை இல்லாத அளவாக 20,701 மெகா வாட்டாக அதிகரித்தது.

கடும் வறட்சியால் விவசாயிகள் பாசனத்திற்கு நிலத்தடி நீரை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால், மின் நுகர்வு நேற்று முன்தினம், எப்போதும் இல்லாத வகையில் 20,830 மெகாவாட்டாக அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

புதிய மின் இணைப்பு, மின் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், ஆண்டுதோறும் மின் நுகர்வு அதிகரிப்பது வழக்கம். அதன்படி, ஆண்டுக்கு சராசரியாக 750 மெகா வாட் வரை கூடுதலாக அதிகரிக்கும்.

Image 1265081


கொரோனா ஊரடங்கிற்கு பின் தொழில் நிறுவனங்கள் அனைத்தும், 2023ல் முழுவீச்சில் செயல்பட்டன. அந்த ஆண்டில், மின் நுகர்வு முந்தைய ஆண்டை விட அதிகரித்தது.

இந்தாண்டு லோக்சபா தேர்தல், மிக கடுமையான வெயிலால் வீசும் வெப்ப அலை உள்ளிட்ட காரணங்களால், மின் நுகர்வு எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துவருகிறது.

கடந்த ஆண்டில் உச்ச அளவாக இருந்த 19,387 மெகா வாட் மின் நுகர்வை விட, இந்தாண்டு மார்ச் 22ம் தேதி, 19,409 மெகா வாட்டாக அதிகரித்தது.

இது தொடர்ந்து அதிகரித்து, நேற்று முன்தினம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. எனவே, கடந்த ஆண்டில் ஏற்பட்ட உச்ச அளவுடன் ஒப்பிடும்போது, கடந்த 41 நாட்களில் மட்டும் மின் நுகர்வு 1,443 மெகா வாட் அதிகரித்து, புதிய உச்சத்தை தொட்டு உள்ளது.

ஆண்டு வாரியாக

அதிகபட்ச மின் தேவை

-----------------------

ஆண்டு - மின் தேவை மெகா வாட்டில்

2017 ஏப்., 19 - 15,240

2018 மார்ச் 11 - 15,847

2019 ஏப்., 3 - 16,151

2020 மார்ச் 26 - 16,481

2021 மார்ச் 29 - 17,196

2022 ஏப்., 29 - 17,563

2023 ஏப்., 20 - 19,387

2024 மே 2 - 20,830

***






      Dinamalar
      Follow us