தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சபாநாயகருக்கு எம்.எல்.ஏ.,க்கள் பாராட்டு மழை

 சபாநாயகருக்கு எம்.எல்.ஏ.,க்கள் பாராட்டு மழை

 சபாநாயகருக்கு எம்.எல்.ஏ.,க்கள் பாராட்டு மழை

2


ADDED : செப் 09, 2026 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2026 04:49 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: அனைவருக்கும் பேச வாய்ப்பு வழங்கியதாக, சபாநாயகர் பிரபாகரை, எம்.எல்.ஏ.,க்கள் பாராட்டினர்.

தமிழக சட்டசபையில் நடந்த விவாதம்



இந்திய கம்யூனிஸ்ட் - மாரிமுத்து: அனைத்து உறுப்பினர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கினார். அவர்கள் வாயிலாக, மக்கள் குரலை சபையில் ஒலிக்க செய்துள்ளார்.

அமைச்சர் ஆனந்த்: இப்படியொரு சபாநாயகர் எங்களுக்கு மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளுக்கும் கிடைத்தது மகிழ்ச்சி.

பா.ம.க., - சவுமியா: இதற்கு முன் சபாநாயகர் எப்படி இருந்தனர் என்பது எனக்கு தெரியாது. ஆனால், சபாநாயகர் பிரபாகர் அனைவருக்கும் பிடித்தமானவராகவும், சம வாய்ப்பு தரக்கூடியவராகவும் உள்ளார்.

அ.தி.மு.க., - சி.வி.சண்முகம்: கடந்த ஆட்சியில், ஐந்தாண்டுகளில் மூன்று முறை தான் வாய்ப்பு தரப்பட்டது. இந்தாண்டில் எத்தனை முறை பேசினேன் என்பது, எனக்கு தெரியாத அளவிற்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., - ஓ.எஸ்.மணியன்: அமைச்சர்கள் பேசுவதை கூட, சபைக்குறிப்பில் இருந்து நீக்கும் நடுநிலையான சிறந்த சபாநாயகராக பிரபாகர் செயல்படுகிறார்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us