சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் திறந்து வைத்தார் ராகவா லாரன்ஸ்
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் திறந்து வைத்தார் ராகவா லாரன்ஸ்
ADDED : மார் 08, 2025 12:59 AM

புதுக்கோட்டை:மாணவனின் கோரிக்கையை ஏற்று, அறக்கட்டளை நிதியில் கிராமத்தில் அமைத்த குடிநீர் பிளான்டை, நடிகர் ராகவா லாரன்ஸ் நேற்று திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், குருக்குலையாபட்டியைச் சேர்ந்த விஷ்ணு என்ற மாணவன், தனியார் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ராகவா லாரன்ஸ், இவரது திறமையை பாராட்டி, 'உனக்கு என்ன வேண்டும்?' எனக் கேட்டபோது, 'என் ஊர் மக்கள் குடிநீருக்காக நீண்ட துாரம் சென்று வருகின்றனர்; சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் அமைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும்' என, கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து, ராகவா லாரன்ஸ் தன் அறக்கட்டளை நிதியிலிருந்து, குருக்குலையாபட்டியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் அமைத்துக்கொடுத்தார். அந்த பிளான்டை நேற்று ராகவா லாரன்ஸ் திறந்து வைத்தார்.