ராஜராஜ சோழன் கால செம்பு நாணயம் மருங்கூரில் கண்டெடுப்பு
ராஜராஜ சோழன் கால செம்பு நாணயம் மருங்கூரில் கண்டெடுப்பு
ADDED : ஜூலை 02, 2024 03:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : கடலுார் மாவட்டம் மருங்கூர் அகழாய்வில், ராஜராஜ சோழன் காலத்தை சேர்ந்த செம்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி வட்டம் மருங்கூரில், தமிழக தொல்லியல் துறையின் இணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில், அகழாய்வு பணி நடக்கிறது. இதில், ராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்த செம்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தன் எக்ஸ் தளத்தில், 'மருங்கூர் அகழாய்வில், ராஜராஜ சோழன் கால செம்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இது, 23.3 மி.மீ., விட்டமும் 2.5 மி.மீ., தடிமனும், 3 கிராம் எடையும் உள்ளது' என்று, பதிவிட்டுள்ளார்.