ADDED : மார் 11, 2025 06:21 PM

கொடுத்ததை பயன்படுத்துங்கள்
சிலர் பணக்காரர்களாக இருப்பார்கள். ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல் தாங்களும் ஏழை மாதிரி பாவனை செய்வார்கள். வசதி இருந்தும் இப்படி வாழ்வதை இஸ்லாம் ஆதரிக்கவில்லை. நபிகள் நாயகத்தை சந்திக்க அழுக்கான ஆடை அணிந்த ஒருவர் வந்தார். அவரிடம், ''ஏன்... இப்படி ஆடை அணிந்திருக்கிறீர்கள். உங்களிடம் பணம் இல்லையா'' எனக் கேட்டார்.
''என்னிடம் ஒட்டகங்கள், குதிரைகள், ஆடுகள் என பல சொத்துக்கள் உள்ளன'' ''இறைவன் உங்களுக்கு இவ்வளவு சொத்துக்கள் கொடுத்திருக்கிறான். அவனது அருளின் அடையாளம் உங்கள் உடலில் வெளிப்பட்டிருக்க வேண்டும்'' என்றார் நாயகம்.
அதாவது இறைவன் வழங்கியிருக்கும் சொத்தை பயன்படுத்தாமல் பூட்டி வைப்பது தவறு. இச்செயல் அவனை பழிப்பதற்கு சமம். எனவே நல்ல ஆடைகளை அணிய வேண்டும். விரும்புவதை சாப்பிட வேண்டும். பிறருக்கும் கொடுத்து உதவ வேண்டும். அதே நேரம் கர்வமும், வீண் விரயமும் செய்யக் கூடாது.
இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:55 மணி