ADDED : ஏப் 01, 2024 08:10 PM

கேள்வி பிறந்தது
மறுமை நாளில் இறைவன் முன் நிறுத்தப்படுவான் மனிதன். அவனிடம், 'மண்ணுலகில் தரப்பட்ட செல்வம் குறித்தும், அதை எப்படி செலவிட்டாய்' என்றும் கேள்வி கேட்கப்படும்.
அதற்கு மனிதன், 'செல்வத்தை பெருக்கினேன். அதை பூமியிலேயே விட்டு வந்தேன். என்னை அங்கு அனுப்பினால் அதை எடுத்து வருவேன்' என சொல்வான்.
இதற்கு, 'மறுமைக்கு வேண்டிய செயல்களை செய்தாயா' என மீண்டும் கேட்கப்படும். அதற்கு பதிலளிக்க முடியாமல் திணறுவான். பிறகு என்ன? அந்த மனிதன் நரகத்திற்கு தள்ளப்படுவான்.
இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது...
* பணத்தை சேர்ப்பதோடு தர்மமும் செய்ய வேண்டும்.
* நண்பர்கள், உறவினர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும்.
* எப்போதும் நேர்மையாக வாழ குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.
இப்படி செய்தால் மறுமை வாழ்வு எளிதாக
அமையும்.
இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:43 மணி

