ADDED : ஏப் 05, 2024 06:35 PM

ஒரு மனிதன் இறந்த பிறகு அவருக்கும், உலக விஷயங்களுக்கும் இடையே தொடர்பு இல்லாமல் போகும். ஆனால் மூன்று விஷயத்தை தவிர...
1. நீண்ட காலம் பலன் தரும் தர்மம்
எ.கா: ஒருவர் மரத்தை நட்டு வளர்த்திருப்பார். வெயில் காலத்தில் அந்த மரநிழலில் ஒதுங்குவோரின் மனம் குளிரும். அப்போது மரத்தை வளர்த்தவருக்கு நன்மை கிடைக்கும்.
2. அறிவை வளர்க்கும் கல்வி
எ.கா: அறிவியல், மருத்துவம் என நாளுக்கு நாள் புதுப்புது கண்டுபிடிப்புகள் வருகின்றன. இந்த கண்டுபிடிப்பின் பயன்களை நாம் தானே அனுபவிக்கிறோம். இதன்மூலம் கண்டுபிடிப்பாளர்களுக்கு நன்மை சேரும்.
3. ஒழுக்கமுள்ள குழந்தைகள்
எ.கா. ஒழுக்கமுள்ள மனிதர்களால் சமுதாயம் நல்ல நிலையை அடைகிறது. தவறுகள் குறைகிறது. நாட்டில் நிம்மதி நிலவுகிறது.
இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:40 மணி

