ADDED : ஆக 06, 2024 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பா.ம.க., பிரமுகர் ராமலிங்கம் கொலை தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, மூன்று பேருக்கு என்.ஐ.ஏ., அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில், 2019 பிப்., 5ல், பா.ம.க., பிரமுகர் ராமலிங்கம் வெட்டி கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக, இரு தினங்களுக்கு முன், 15 இடங்களில் சோதனை நடத்தி, மொபைல் போன், சிம் கார்டு உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்களை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அவற்றை ஆய்வு செய்து, தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., எனும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பில் நிர்வாகியாக இருந்த, திருச்சியைச் சேர்ந்த அமீர் பாஷா, மயிலாடு துறையைச் சேர்ந்த நவாஸ் கான், நவாஸ்தீன் ஆகியோருக்கு, சென்னையில் உள்ள என்.ஐ.ஏ., அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, சம்மன் அனுப்பி உள்ளனர்.