ADDED : மே 25, 2024 02:44 AM
கோவை,:ரெட்பிக்ஸ் எடிட்டரை, 31ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் போலீசாரை அவதுாறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட வழக்கில் இரண்டாவது நபராக, ரெட்பிக்ஸ் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் திருச்சியில் இருந்து அழைத்து வரப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்ட், கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். போலீசார் அவரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து, நீதிபதி உத்தரவிட்டார்.
போலீசார் விசாரணையை முடித்து, 4:00 மணிக்கு மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி அவரை வரும், 31ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். போலீசார் அவரை மீண்டும் பாதுகாப்புடன், திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோரின் ஜாமீன் மனு, 27ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

