ADDED : மே 27, 2024 04:47 AM
சென்னை : தமிழக மின்வாரியத்திற்கு, 5,120 மெகாவாட் திறனில், ஆறு அனல்மின் நிலையங்கள் உள்ளன. கோடை வெயிலால், சில நாட்களாக மின்தேவை அதிகரித்து, இம்மாதம், 2ம் தேதி, 20,830 மெகாவாட்டாக உச்சத்தை எட்டியது.
இரு வாரங்களாக, பல மாவட்டங்களில் கோடை மழை பெய்கிறது. அதனுடன், வார விடுமுறையும் சேர்ந்ததால், தற்போது மின்தேவை, 15,000 மெகாவாட்டாக குறைந்து உள்ளது.
சீசன் துவங்கியதால், காற்றாலைகளில் இருந்து சில தினங்களாக தினமும் சராசரியாக, 4,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. நேற்று முன்தினம் மாலை, 4,400 மெகாவாட் கிடைத்தது. எனவே, மின்தேவையை பூர்த்தி செய்ய, காற்றாலை மின்சாரத்தை முழுதுமாக மின்வாரியம் பயன்படுத்துகிறது.
நிலக்கரியை மிச்சப்படுத்த மேட்டூர், வடசென்னை, துாத்துக்குடி அனல்மின் நிலையங்களில், 2,250 மெகாவாட் திறன் உடைய ஏழு அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

