ADDED : மே 29, 2024 01:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டாக்டர்களின் சேவைகளையும், கடினமான பணியையும் கவுரவிக்கும் வகையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில், காலமுறை ஊதியம் வழங்குவதற்கான அரசாணை, 354 அறிவிக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்குப் பின், அரசாணை செயல்படுத்தப்படாமல் இருந்தது.
தற்போது, தி.மு.க., அரசு பொறுப்பேற்று மூன்றாண்டுகளாகியும் செயல்படுத்தப்படவில்லை. கருணாநிதி நுாற்றாண்டையொட்டி, தமிழக அரசு பல்வேறு திட்டங்களையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.
நுாற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, அவரது ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட அரசாணையை அமல்படுத்த வேண்டும்.
டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கும்பட்சத்தில், ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் தான் அரசு கூடுதலாக செலவாகும்.
- எஸ்.பெருமாள் பிள்ளை,
தலைவர், அரசு டாக்டர்களுக்கான சட்டப் போராட்டக் குழு.