ADDED : ஜூலை 05, 2024 09:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி:திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
சமீப காலமாக வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள், விமான பயணியரிடம் நடத்தும் சோதனையில், பல லட்சம் ரூபாய் மதிப்பு கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை, 'ஸ்கூட் ஏர்லைன்ஸ்' விமானத்தில், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த பயணியரிடம், வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவர், தகடு வடிவில் 1,600 கிராம் தங்கத்தை மறைத்து, கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து, 1.16 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.