sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரவிந்த் சாமிக்கு சம்பள பாக்கி; பட தயாரிப்பாளருக்கு 'வாரன்ட்'

/

அரவிந்த் சாமிக்கு சம்பள பாக்கி; பட தயாரிப்பாளருக்கு 'வாரன்ட்'

அரவிந்த் சாமிக்கு சம்பள பாக்கி; பட தயாரிப்பாளருக்கு 'வாரன்ட்'

அரவிந்த் சாமிக்கு சம்பள பாக்கி; பட தயாரிப்பாளருக்கு 'வாரன்ட்'


ADDED : ஜூன் 18, 2024 06:10 AM

Google News

ADDED : ஜூன் 18, 2024 06:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : நடிகர் அரவிந்த் சாமிக்கு சம்பள பாக்கி வழங்காத வழக்கில், பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத் தயாரிப்பாளருக்கு எதிராக 'வாரன்ட்' பிறப்பித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பிரபல நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில், 2018ல், பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் வெளியானது. இந்த படத்தில் நடிப்பதற்கு அரவிந்த் சாமிக்கு, 3 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டது.

ஒப்பந்தம்


இதுதொடர்பாக, தயாரிப்பாளர் கே.முருகன்குமார், அரவிந்த் சாமி இடையே, 2017ல் ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தப்படி, தனக்கு முழு சம்பள தொகையை, படத் தயாரிப்பாளர் வழங்கவில்லை என, அரவிந்த் சாமி வழக்கு தொடர்ந்தார்.

மனுவில், 'சம்பளத்தில் 30 லட்சம் ரூபாய் பாக்கி வைக்கப்பட்டு உள்ளது. வருமான வரி பிடித்தமான 27 லட்சம் ரூபாயையும் செலுத்தவில்லை. பட வெளியீட்டுக்காக தன்னிடம் பெற்ற 35 லட்சம் ரூபாய் கடனையும் திருப்பித் தரவில்லை' என்று, குறிப்பிட்டுஇருந்தார்.

வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 'தயாரிப்பாளர் முருகன்குமார், மொத்தமாக 65 லட்சம் ரூபாயை, 18 சதவீத வட்டியுடன் நடிகர் அரவிந்த் சாமிக்கு வழங்க வேண்டும்.

'டி.டி.எஸ்., வரி 27 லட்சம் ரூபாயை, வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டும்' என, 2019ல் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுப்படி, தனக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்காததால், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரியும், தயாரிப்பாள ருக்கு சொந்தமான சொத்துக்களை அறிவிக்க உத்தரவிடக் கோரியும், அரவிந்த் சாமி தரப்பில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

சொத்து இல்லை


இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சொத்துக்கள் குறித்து அறிவிக்க வேண்டும் என, படத் தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, படத் தயாரிப்பாளர் தரப்பில், சொத்துக்கள் குறித்த விபரங்களை தாக்கல் செய்து விட்டதாகவும், தனக்கு சொந்தமாக எந்த சொத்துக்களும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு, 'சொத்துக்கள் ஏதும் இல்லாவிட்டால், திவாலானவர் என அறிவித்து, கைது நடவடிக்கையில் இருந்து நிவாரணம் பெறலாம்' என தெரிவித்த நீதிபதி, ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டும், சொத்து விபரங்களை தாக்கல் செய்ய காலதாமதம் செய்ததால், தயாரிப்பாளருக்கு எதிராக, 'வாரன்ட்' பிறப்பித்து உத்தரவிட்டார்.

விசாரணையை ஜூலை 8க்கு தள்ளிவைத்தார்.






      Dinamalar
      Follow us